'அட!.. இந்திய அணிக்கு இப்படி ஒரு ப்ளஸ் இருக்கே'!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்... நடக்கப்போகும் மேஜிக்!.. கவாஸ்கரின் தரமான கணிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Jun 15, 2021 11:03 PM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து மிகத்துள்ளியமான கணிப்பை சுனில் கவாஸ்கர் முன்வைத்துள்ளார்.

wtc final india more impact players than nz gavaskar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்னும் 3 நாட்களில் தொடங்குகிறது. அதையொட்டி, இந்திய அணி முழு வீச்சில் தயாராகி வருகிறது. வீரர்களுக்குள் நடந்த intra squad கிரிக்கெட் போட்டியில், ரிஷப் பண்ட் சதம் விளாசியுள்ளார். ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்துள்ளனர். இதனால், இந்திய அணி நம்பிக்கையோடு இறுதிப் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

இந்நிலையில், Times Of India-வுக்கு சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சரிசமமான பலத்துடன் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்று வென்றுவிட்டதால், நியூசிலாந்துக்கு தான் வெற்றிவாய்ப்பு அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக எந்தவித கிரிக்கெட் போட்டியும் இன்றி பசியுடன் காத்திருக்கிறது இந்திய அணி. 

அத்தகைய வேட்கை இருக்கும் இந்திய அணி புத்துணர்ச்சியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது. அதுமட்டுமல்ல, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வீரர்கள் இருப்பதால், அவர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தருவார்கள்" என்று கூறியுள்ளார். 

உண்மையில், சுனில் கவாஸ்கர் கூறுவது சரியான கணிப்பாகும். குறிப்பாக, அவர் கூறியிருக்கும் பசி எனும் வார்த்தை மிக முக்கியமான சொல். அதாவது, கடந்த ஒரு மாதமாகவே இந்திய வீரர்கள் கடுமையான குவாரண்டைனில் இருந்து வந்தனர். இந்தியாவில் 14 நாட்கள், இங்கிலாந்தில் 10 நாட்கள் என்று அறைகளிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், எப்போது கிரிக்கெட் களத்தில் இறங்குவோம் என்று வீரர்கள் ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

உளவியல் ரீதியாக இது ஒரு முக்கியமான காரணியாக பார்க்கலாம். இவ்வளவு நாட்களாக ஓய்வில் இருந்து சேமித்து வைத்திருந்த ஆற்றலை, அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அப்படியே வெளிக்காட்டுவார்கள். பவுலிங்கில் அசுரத்தனம் இருக்கும். பேட்டிங்கில் மட்டும் நிறுத்தி நிதானமாக தாக்குப்பிடித்துவிட்டால், நியூசிலாந்தை வீழ்த்திவிடலாம் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wtc final india more impact players than nz gavaskar | Sports News.