இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிரான 'அந்த' ஸ்கெட்ச்!.. நியூசிலாந்து திட்டத்தை தவிடுபொடியாக்க... கோலி வகுத்துள்ள மெகா வியூகம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகும் விதமாக, விராட் கோலி தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை இத்தொடர் நடைபெறுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, ஃபைனல் மேட்ச்சுக்கு தயாராக இந்திய அணி பயிற்சிப் போட்டிகளில் ஏதும் விளையாடவில்லை. அதேசமயம் அணி வீரர்களிடையே இன்ட்ரா ஸ்குவாட் கிரிக்கெட் நடைபெற்றது. இதில், ரிஷப் பண்ட் சதம் விளாசினார். அதேபோல், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர்.
இதுகுறித்த வீடியோவை பிசிசிஐ அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட வீடியோவில், விராட் கோலி பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக Pull Shot பந்துகளை கோலி அதிகம் பயிற்சி செய்து வருகிறார். ஒரு பந்தில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தாலும், மற்றொரு ஷார்ட் பந்தை லெக் சைடில் விளாசினார். நியூசிலாந்தின் அபாயகரமான Pacers கோலிக்கு எதிராக மட்டுமின்றி, அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் எதிராக புல் ஷார்ட் வீசுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. அதை எதிர்கொள்ளும் விதமாக கோலி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதேசமயம், விராட் கோலி யார்க்கர் பந்துகளையும் டீல் செய்ய பயிற்சி மேற்கொண்டார். இஷாந்தின் லைன் அன்ட் லெந்தின் பந்துகளையும் அவர் அழகாக டிரைவ் செய்தார். இந்த கடும் பயிற்சி விராட் கோலிக்கு நிச்சயம் தேவை. ஏனெனில், போட்டியின் போது இந்திய அணி எத்தகைய மோசமான நிலையில் இருந்தாலும், கோலி களத்தில் இருந்தால் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சூழலில், விராட் கோலி இல்லாத இந்திய அணியை கற்பனை செய்து பார்ப்பது கடினம். டி20 தவிர்த்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இல்லாத இந்திய அணி வெற்றிபெறுவது மிகவும் கடினம். அந்த வகையில், இந்திய அணியில் எத்தனை நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், நியூசிலாந்தின் முதல் டார்கெட் விராட் கோலி தான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Three sleeps away from the BIG GAME. 👍👍
How excited are you? 🙌 🙌#WTC21 #TeamIndia pic.twitter.com/nqaI6cf33H
— BCCI (@BCCI) June 15, 2021