'ரசிகரா?.. ஆதரவாளரா'?.. திடீரென 'விராட் கோலி' புகைப்படத்தை பகிர்ந்த 'ஜான் சீனா'!.. ஏன்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படத்தை WWE நட்சத்திர வீரர் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பகிர்ந்துள்ள சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் வெள்ளிக்கிழமை அன்று நடக்க உள்ளது.
இந்நிலையில், எவ்வித சொற்களும், குறியீடுகளும் இன்றி, இந்திய அணியின் கேப்டன் கோலி படத்தை மட்டும் ஜான் சீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த படத்திற்கு அவர் கேப்ஷன் எதுவும் கொடுக்கவில்லை. இதே போல இந்தியா - நியூசிலாந்து அணிகள் கடந்த 2019-ல் உலக கோப்பை அரையிறுதியில் மோதி விளையடிய போது ஜான் சீனா, கோலி படத்தை பகிர்ந்திருந்தார். அதை வைத்து பார்க்கும் போது, அவர் கோலியின் தீவிர ரசிகராக இருக்கலாம் என வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
இதற்கிடையே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ஜான் சீனா தனது ஆதரவை இந்திய அணிக்கு தெரிவிக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
