'ரோஹித் ஷர்மா விக்கெட் ஒரு மேட்டரே இல்ல'!.. 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில்... நியூசிலாந்தின் வியூகத்தை வெளியிட்ட ஸ்டைரிஸ்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Jun 14, 2021 08:20 PM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரோஹித் ஷர்மாவுக்கு காத்திருக்கும் சவால் குறித்து ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

wtc final ind nz rohit sharma swinging ball issue styris

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 18ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. பிறகு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்த 2 தனித்தனி தொடரிலும், ஓப்பனராக களமிறங்க உள்ளார், ரோஹித் ஷர்மா.

ஒருநாள், டி20 போட்டிகளில் விளாசித் தள்ளும் ரோஹித், இதுவரை தன்னை டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக நிரூபித்ததில்லை. இந்திய கண்டிஷன்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் திணறும் ரோஹித், வெளிநாடு கண்டிஷன்களிலும் பெரிதாக ஒன்றும் செய்ததில்லை. எனினும், கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், ரோஹித் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தில் ஐடியா இருந்தது. தெளிவான புரிதலும், திட்டமிடலும் இருந்தது. 

ரோஹித்தின் வெளிநாடு டெஸ்ட் ஆட்டங்களை பொறுத்தவரை, இந்தியாவுக்கு வெளியே இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 945 ரன்கள் எடுத்துள்ளார். பெஸ்ட் ஸ்கோர் 79. ஆவரேஜ் 27.00. குறிப்பாக, இங்கிலாந்தில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடியிருக்கிறார். இரு இன்னிங்சிலும் சேர்த்து 34 ரன்கள். இவரது சிறந்த ஸ்கோரான 79 இலங்கையில் அடித்தது தான். 

இந்த நிலையில், இங்கிலாந்தின் ஸ்விங் கண்டிஷனில், ரோஹித் தடுமாறுவார் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சில் எந்த ரகசியமும் இல்லை. அந்த அணியில் சவுதி, போல்ட் மற்றும் மூன்றாவது ஃபாஸ்ட் பவுலராக ஜேமீசன் அல்லது டி கிராண்ட்ஹோம் இருப்பார்கள். அதேசமயம், நீல் வாக்னர் களத்திற்கு வர வாய்ப்புள்ளது. நீல் வாக்னரின் ஆக்ரோஷம், புதிய பந்து எடுக்கப்படும் வரை, மிடில் ஓவர்களில் விராட் கோலியைப் போன்ற ஒருவரின் விக்கெட்டை எடுப்பது அவருடைய திறமையாகும்.  

ரோஹித்தை பொறுத்தவரை, பிட்ச் தான் அவரது ஆட்டத்தை முடிவு செய்யும். அதற்கு மேல் இதில் பேச ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன். பந்து அதிகம் ஸ்விங் ஆகிறது என்றால் ரோஹித் பெரும் போராட்டத்தை சந்திப்பார் என்றே நினைக்கிறன். ஏனெனில், ரோஹித் தனது இன்னிங்சில் ஆரம்பத்தில் தனது கால்களை பெரிதாக நகர்த்தமாட்டார் என்று தெரியும். எனவே, ஸ்விங் இருந்தால் நிச்சயம் இறுதிப் போட்டி அவருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கலாம்" என்று ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wtc final ind nz rohit sharma swinging ball issue styris | Sports News.