VIDEO: ஃபீல்டிங் செய்யும் போது... சக வீரருடன் மோதி... மைதானத்திலேயே சுருண்டு விழுந்த டு ப்ளசிஸ்!.. மருத்துவமனையில் அனுமதி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான டு ப்ளசிஸ், ஃபீல்டிங் செய்யும் போது படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணிக்காக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டு ப்ளசிஸ் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், நேற்று (12.6.2021) அபுதாபியில் நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் குவெட்டா கிளேடியட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி ஆகிய அணிகள் மோதின.
குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த டு ப்ளசிஸ், டேவிட் மில்லர் அடித்த பந்தை பிடிக்க முயன்றார். அப்போது சக வீரர் முகம்மது ஹஸ்னைனுடன் பயங்கரமாக மோதினார்.
முகம்மது ஹஸ்னைன் கால் டு பிளசிஸின் கழுத்தில் பலமாக தாக்கியது. இதில் காயம் அடைந்த டு ப்ளஸிஸ் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். மேலும், காயத்தின் தீவிரத்தன்மை குறித்து ஆராய்வதற்காக டு ப்ளசிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Get well soon @faf1307#FafduPlessis pic.twitter.com/WRfX8N6xQ7
— ABHIJEET MONDAL (@abhijeet_234) June 13, 2021

மற்ற செய்திகள்
