‘விளையாட்டாய் செய்து விபரீதத்தில் முடிந்த பிராங்க்..’ ஜெயில் தண்டனை பெற்ற யூடியூப் பிரபலம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jun 03, 2019 05:09 PM

ஸ்பெயினில் வீடற்ற ஒருவருக்கு டூத்பேஸ்ட் நிரப்பிய பிஸ்கெட்டை கொடுத்து ஏமாற்றியதற்காக யூடியூப் பிரபலம் ஒருவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

youtube prankster goes to jail for giving homeless man toothpaste oreo

ஸ்பெயினைச் சேர்ந்த யூடியூப் பிரபலமான காங்குவா ரென் என்பவர், சாலை ஓரத்திலிருந்த வீடற்ற ஒருவருக்கு ஓரியோ பிஸ்கெட்டிலிருந்த கிரீமை எடுத்துவிட்டு அதில் டூத்பேஸ்ட்டை நிரப்பிக் கொடுத்து ஏமாற்றியுள்ளார். அதை சாப்பிட்டதும் அந்த நபர் வாந்தி எடுத்துள்ளார்.

இப்படி ஏமாற்றிய வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் காங்குவா ரென். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காங்குவா ரென்னுக்கு 15 மாத சிறை தண்டனை அளித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அவரால் பாதிக்கப்பட்டவருக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : #PRANKS #TOOTHPASTE #OREO