வைரலாகும் ‘தோனியின் ரன் அவுட்...’ ஆனா அவுட் பண்ணினது அவர் இல்ல..?!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | May 20, 2019 01:14 PM

இங்கிலாந்தின் லீட்சில் நடைபெற்ற பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை வென்றுள்ளது.

Adil Rashid pulls off an MS Dhoni

நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 351 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 47 ஓவர்கள் முடிவில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி முதல் மூன்று ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில் சர்ஃபராஸ் அகமது, பாபர் அசாம் பாட்னர்ஷிப் சிறப்பாக விளையாடி வந்தது. அப்போது அடில் ரஷீத், பாபர் அசாமை ரன் அவுட் செய்தது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

அடில் ரஷீதின் அந்த ரன் அவுட்டே இப்போது வைரலாகி வருகிறது. விக்கெட் கீப்பர் பட்லர் பந்தை எடுத்து வேகமாக பவுலர் அடில் ரஷீதிடம் வீச அவர் திரும்பி ஸ்டம்பைப் பார்க்காமலேயே பந்தை சரியாக வீசி ரன் அவுட் செய்துள்ளார். அவர் திரும்பிப் பார்த்து வீசியிருந்தால் பாபர் அசாம் அதற்குள் கிரீசுக்குள் வந்திருப்பார்.

இதற்கு முன் சாமர்த்தியமாக இதேபோல பல ரன் அவுட்களை செய்து அசத்தியவர் தோனி. இதே மாதிரி திரும்பிப் பார்க்காமல் தோனி செய்த ரன் அவுட்டுடன் இதை ஒப்பிட்டு ‘தோனி ரன் அவுட்’ என ரசிகர்கள் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : #DHONI #RUNOUT