‘உலகக் கோப்பையில் நான் சரியா விளையாடல’... 'மனம் திறந்து பேசிய இந்திய வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 19, 2019 11:48 PM
உலகக் கோப்பையில் தான் சரியாக விளையாடவில்லை என்றும், நிறைய பாடங்களை கற்றுக்கொண்டதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் தெரிவித்தார்.
டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் 4-வது சீசன் தமிழகத்தில் நடைப்பெற்று வருகிறது. நத்தத்தில் நடைபெற்ற போட்டியை சிறப்பிக்க, இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், ‘இதுபோன்ற தொடர்கள் வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து ஐபிஎல், ரஞ்சி போட்டிகளில் இடம்பெற மிகவும் உதவுகிறது. இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், இந்தியா முழுவதும் கவனிக்கப்படுவார்கள்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இயற்கை வளம் மிகுந்த அழகான இடமாக நத்தம் இருக்கிறது. சமீப காலங்களில் இந்தியாவில் நிறைய மைதானங்கள் வளர்ந்து வருவது, கிரிக்கெட் வளர்ச்சி உதவியாக இருக்கும். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் நான் சரியாக விளையாடவில்லை. இருப்பினும் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை கற்றுத் தருகிறது’ என்றார்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர், வெள்ளிக்கிழமை இரவு திண்டுக்கல்லில் தொடங்கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. அஸ்வின் அதிரடியால், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.