'தோனி' சிஎஸ்கேவில் இருந்து விலக்குகிறாரா?.. 'கசிந்த' தகவல்.. 'சிஎஸ்கே' 'அதிகாரப்பூர்வ' விளக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 27, 2019 11:27 PM

தோனி ஐபிஎல் தொடரில் எப்படி ஆடுகிறார்? என்பதை பொறுத்து தான், அவருக்கு டீமில் இடம் கிடைக்குமா? என்பதை தெரிவிக்க முடியும் என ரவி சாஸ்திரி நேற்று தெரிவித்து இருந்தார்.

\'Nation Knows That\'.. CSK Reply for Speculation on MS Dhoni

இந்தநிலையில் திடீரென சிஎஸ்கே அணியில் இருந்து தோனி விலக விரும்புகிறார் என, தகவல்கள் வெளியாகின. தனக்காக அணி ஒவ்வொரு ஆண்டும் 15 கோடி ரூபாய் செலவு செய்வதால், 2021-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது தன்னை விடுவித்து விட்டு பின்னர் ரைட் டூ மேட்ச் ஆப்ஷன் வழியாக தன்னை குறைந்த தொகைக்கு ஏலத்தில் எடுக்கும்படி தோனி கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து சென்னை அணி அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், '' இல்லை. அது இந்த தேசத்திற்கே தெரியும்,'' என கூறியுள்ளது.