'எதிர்கால' திட்டம் என்ன?.. முதன்முறையாக. 'மவுனம்' கலைத்த தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 27, 2019 10:35 PM

தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்த கேள்விக்கு கிரிக்கெட் வீரர் தோனி முதன்முறையாக மவுனம் கலைத்து பதில் அளித்திருக்கிறார்.

MS Dhoni breaks silence on international comeback, Read here

உலகக்கோப்பை போட்டிக்கு பின் தோனி இந்திய அணியில் இடம் பெறவில்லை. மேலும் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. தோனி குறித்த கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐபிஎல் தொடரில் அவர் எப்படி ஆடுகிறார்? என்பதை பொறுத்து தான் உள்ளது என பதிலளித்தார்.

இந்தநிலையில் இன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியிடம் அவரது எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ''ஜனவரி வரை என்னிடம் இந்த கேள்வியை கேட்காதீர்கள்,'' என தெரிவித்து இருக்கிறார்.

ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது. தொடர்ந்து நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதனால் மேற்கண்ட தொடர்களை மனதில் வைத்துத்தான் தோனி ஜனவரி வரை காத்திருக்க சொன்னாரா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.