IPL 2020: 'என்னால' முடியல... முதன்முறையாக 'மனந்திறந்த' அஸ்வின்.. 'உடைந்த' ரகசியம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 05, 2019 10:51 PM
இந்த வருடம் ஐபிஎல் வெற்றி, தோல்விகளை விடவும் அஸ்வின் அணிமாறியது குறித்துத்தான் அதிகம் விவாதிக்கப்பட்டது. பஞ்சாப் டீமின் கேப்டனாக இருந்த அஸ்வினை டெல்லி அணிக்கு பஞ்சாப் அணி விற்பனை செய்தது. இதற்கான காரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகின.

இந்தநிலையில் தன்னுடைய அணிமாற்றம் குறித்து அஸ்வின் முதன்முறையாக மனந்திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், '' கிங்ஸ் லெவன் அணியுடனான பயணம் சிறப்பாக இருந்தது. என்னுடைய சிறப்பை அணிக்கு நான் அளித்தேன். ஆனால் எதிர்பார்த்த வெற்றிகளை நான் அணிக்கு தரவில்லை என்று அணி உரிமையாளர்கள் கருதினார்கள்.
உண்மை தான் 2 வருடங்களும் என்னால் அணியை பிளே ஆப்புக்கு தகுதிபெற வைக்க முடியவில்லை. இதனை நான் துணிச்சலாக ஒப்புக் கொள்கிறேன். அது என்னுடைய தவறு தான். தோல்வியில் இருந்து நான் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டேன். புதிய அணியில் இதனை பயன்படுத்தி வெற்றியை காண காத்திருக்கிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.
