2020 ஐபிஎல்லுக்கு அப்புறம் 'முடிவு' தெரிஞ்சுரும்.. தோனி 'ஓய்வு' குறித்து.. பயிற்சியாளர் சூசகம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 26, 2019 06:54 PM
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரே விஷயம், தோனி இனி விளையாடுவாரா? இல்லையா? என்பதுதான்.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருக்குப்பின் தோனி எந்தவொரு போட்டியிலும் இடம் பெறவில்லை. டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்தவொரு போட்டியிலும் தோனியின் பெயர் இடம் பெறாததால் அவர் இனி விளையாடுவாரா? இல்லை ஓய்வு முடிவை அறிவிக்கப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதப்பொருளாகி வருகிறது.
இந்தநிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனி ஓய்வு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், '' தோனி மீண்டும் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து தான் உள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க வேண்டும்.
மற்ற விக்கெட் கீப்பர்கள் எப்படி செயல்படுகிறார்கள், மேலும் தோனி பார்மை ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் கவனிக்க வேண்டும். ஐபிஎல் தொடர் என்பது மிகப்பெரிய தொடர். ஏன் என்றால் அதற்கு பின் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்,'' என தெரிவித்து இருக்கிறார்.