விளையாடிய முதல் நாளே பலத்த காயமடைந்த சிஎஸ்கே வீரர்..! அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 26, 2019 01:34 AM

இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி சாம் பில்லிங்ஸுக்கு தோல்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

CSK player Sam Billings dislocates his shoulder

நடப்பு ஐபிஎல் டி20 தொடரின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வரும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் ப்ளே ஆஃப் வாய்ப்பையும்  முதல் அணியாக உறுதி செய்துள்ளது.

இந்த தொடரின் துவக்கத்தில் ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் சிலரை மட்டுமே மாற்றி மாற்றி களமிறக்க வரும் தோனி எந்த போட்டியிலும் பேட்ஸ்மேன்களை பெரிதளவில் மாற்றவில்லை. இதில் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கினார். அதுவும் அப்போட்டியில் தோனி காயம் காரணமாக விளையாடத்தால், அவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் விளையாடினார். ஆனால் அதனைத் தொடர்ந்து அவருக்கு அடுத்த போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை 

இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் பங்கேற்பதாக சாம் பில்லிங்ஸ் நேற்று நாடு திரும்பினார். அப்போட்டியில் விளையாடிய சாம் பில்லிங்ஸ் ஃபீல்டிங் செய்யும் போது எதிர்பாராத விதமாக தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

Tags : #IPL #IPL2019 #SAM BILLINGS #CSK