‘ஆர்சிபியின் வெற்றிக்கு காரணமான முக்கிய வீரர் திடீரென பாதியில் விலகல்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 25, 2019 05:40 PM
பெங்களூரு அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் பெங்களூரு அணிக்கு மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. பெங்களூரு அணி ஆடிய முதல் 6 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு பெங்களூரு அணி செய்தது. இதனை அடுத்து மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் பெங்களூரு அணிக்காக ஆடுவதாக இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கவுல்டர் நைல் அட முடியாமல் போனதால், அவருக்கு பதிலாக இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போகாமல் இருந்த டேல் ஸ்டெய்ன் பெங்களூரு அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டார்.
இதனை அடுத்து கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டேல் ஸ்டேயின் களமிறங்கினார் . அப்போட்டியில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஸ்டெய்ன் தோல்பட்டையில் காயம் ஏற்பட்டதால் விரைவில் அவர் நாடு திரும்ப உள்ளார். இது பெங்களூரு அணி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
