‘என்னைய வெறுக்கிறவங்க என்னப்பத்தி பேசாதீங்க’..ஆர்சிபி சர்ச்சை ட்விட்.. பிரபல வீரர் பதிலடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 26, 2019 04:29 PM

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் டுவிட்டரில் பதிவிட்ட சர்ச்சையான கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா காட்டமான ஒரு கருத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Ashok Dinda hits back at RCB Twitter account

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் பெங்களூரு அணிக்கும் மிக மோசமானதாகவே அமைந்தது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 7 -ல் தோல்வியும், 4 -ல் வெற்றியும் பெற்றுள்ளது. தோல்விக்கு காரணமாக பெங்களூரு பந்துவீச்சாளர்களின் மோசமான பந்துவீச்சே காரணம் என பலரும் இணையத்தில் கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் ஆர்சிபி அணி தனது டுவிட்டர் பக்கத்தில், உமேஷ் யாதவ் படத்தைப் போட்டு இந்திய கிரிக்கெட் வீர்ர் டிண்டாவை கலாய்க்கும் விதமாக ட்வீட் செய்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சில நிமிடங்களில் அந்த ட்வீட் நீக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஆர்சிபி ட்விட்டர் பக்கம் விளக்கம் ஒன்றையும் அளித்தது.

அதில், உங்களில் பலர் குறிப்பிட்டதுபோல கடந்த ட்வீட் மோசமான ஒன்றுதான். எனினும், உமேஷ் யாதவை தொடர்ந்து கலாய்த்துவந்தவர்களின் சவாலை ஏற்று, சிறப்பாகப் பந்துவீசினார். கடைசி இரண்டு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகள் எடுத்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தன்னை கலாய்த்தவர்களுக்கு டிண்டா பதிலடிகொடுக்கும் விதமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய பந்துவீச்சு தொடர்பான புள்ளி விவரங்களை அடங்கிய புள்ளிவிவரங்களை குறிப்பிட்டி, ‘என்னைப் பற்றிய உண்மைக்கு எதிரான கருத்துகளை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என காட்டமாகப் பதிவிட்டிருந்தார். அசோக் டிண்டா இதற்கு முன்னர் ஆர்சிபி அணியில் விளையாடியர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொல்கத்தா மற்றும் புனே அணிகளிலும் விளையாடியுள்ளார்.

Tags : #IPL #IPL2019 #RCB #ROYALCHALLENGERSBANGALORE #PLAYBOLD