‘ஒரு கையால் அடித்த சிக்ஸர்’.. ‘மைதானத்தைத் தாண்டி பறந்த பந்து’.. அடிச்சு தூக்கிய மிஸ்டர்360 -யின் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 25, 2019 01:24 AM
ஏபி டிவில்லியர்ஸ் ஒரு கையால் அடித்த சிக்ஸரால், பந்து மைதானத்தைத் தாண்டி விழுந்தது.

ஐபிஎல் டி20 தொடரின் 42 -வது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு டிவில்லியர்ஸ் 82 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 46 ரன்களும், பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 202 ரன்கள் எடுத்தது. இதில் முகமது ஷமி வீசிய 19 -வது ஓவரில் டிவில்லியர்ஸ் அடித்த பந்து மைதானத்தை தாண்டி விழுந்தது.
இதனை அடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டகாரர்காளன கே.எல் ராகுல் 42 ரன்களும், க்ரிஸ் கெய்ல் 23 ரன்களும் எடித்தனர். இதனை அடுத்து மாயன்க் அகர்வால் 35 ரன்களும், மில்லர் 24 ரன்களும் கடைசியில் ஆடிய நிக்கோல்ஸ் பூரன் 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து கைகொடுத்தாலும், கடைசியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது.
WATCH: One handed, out of the ground - AB style 😮😮
— IndianPremierLeague (@IPL) April 24, 2019
Full video here 📹📹 https://t.co/Fi20zy6EYm #RCBvKXIP pic.twitter.com/Drs7UBrQDb
