'அப்பெல்லாம் நாங்க கூல் கேப்டன் தோனியை தீவிரவாதின்னுதான் கூப்டுவோம்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 17, 2019 10:38 PM
தோனியை நாங்கள் தீவிரவாதி என்று அழைப்போம் என்று அவருடைய பழைய நண்பர் கூறியுள்ளார்.

இந்திய அணியாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்படும் மகேந்திர சிங் தோனி சமீபத்தில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, அந்த அணியின் கேப்டனாக ஃபைனல் வரை சென்று விளையாடினார். அவரது திறமையான விக்கெட் கீப்பிங்கும், பேட்டிங்கும் கிரிக்கெட் உலகமே அறிந்தது.
தோனி, கடந்த 2000-ஆம் வருடம் பீகார் அணிக்காக விளையாண்டபோது, அந்த காலக்கட்டத்தில் அவருடன் விளையாண்ட வீரர் சத்ய பிரகாஷ். இவர் தோனியைப் பற்றி தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தோனியை தாங்கள் அனைவரும் அட்டங்வாடி (தீவிரவாதி) என்றுதான் அழைப்போம் என்று கூறி அதிரவைத்துள்ளார்.
மேலும், அப்போதெல்லாம் தோனி 20 பந்துகளில், 50 ரன்கள் குவிப்பார் என்றும், யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்பார் என்றும், எப்போதாவது அவர் அங்கு கேப்டனாக இருப்பார் என்றும் கூறியதோடு, அப்போது இந்தி பேசிய தோனி, இப்போது சரளமாக ஆங்கிலம் பேசுவதாகக் கூறியுள்ளார்.
ஐபிஎல் மேட்சைப் பொறுத்தவரை, அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற பேச்சு எழுந்தபோது,அதற்கு பதில் அளிக்கும் விதமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன், தோனி நிச்சயமாக விளையாடுவார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
