‘இப்டி ரெண்டு பேரும் மாத்திமாத்தி கோபப்பட்டா என்ன பண்றது’.. போட்டியின் நடுவே குல்தீப் செய்த செயலால் கடுப்பான தவான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 29, 2019 04:36 PM

வங்கதேச வீரரின் விக்கெட்டை எடுத்ததும் குல்தீப் யாதவ் மற்றும் ஷிகர் தவான் செய்த செயல் இணைத்தை கலக்கி வருகிறது.

WATCH: Dhawan and Kuldeep celebrates a wicket in wildest way

உலக்கோப்பை தொடர் நாளை இங்கிலாந்தில் கோலகலமாக தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொள்கின்றன. இதனை அடுத்து ஜூன் 5 -ம் தேதி இந்தியாயை தென் ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 421 ரன்களை குவித்து மற்ற அணிகளை பீதியடையவைத்தது. இந்நிலையில் நேற்று நடந்த இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் தோனி, கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் சதமடித்து இந்திய அணிக்கு பலம் சேர்ந்தனர். இதில் 4 -வது ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடி ராகுல், உலகக்கோப்பையில் அந்த இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. இப்போட்டியில் குல்திப் யாதவ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் வங்கதேச வீரரின் விக்கெட்டை எடுத்தவுடன் கொண்டாடும் விதமாக தவானின் தோல்பட்டையை குல்தீப் குறும்பாக கடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #INDVBAN #DHAWAN #KULDEEP