'போங்க தம்பி'...'நாங்க எல்லாம் ராவான ரவுடி'...ஒரு ஷாட்டுகேவா?...கொண்டாடும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 04, 2019 04:07 PM

தோனியின் ட்ரேட்மார்க் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்ட்யா அடிக்க,அதற்கு தோனியின் அழகான சிரிப்பு வைரலானது.இது தான் எங்கள் தல தோனி என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

MS Dhoni react Hardik Pandya executes the evergreen helicopter shot

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.இதனால் முதலில் களம் இறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.சூர்யகுமார் யாதவ் 59 ரன்களும், க்ருனல் பாண்டியா 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அடுத்துக் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.தொடர்ந்து வெற்றியை ருசித்து வந்த சென்னை அணிக்கு,மும்பை முற்றுப்புள்ளி வைத்தது.

இதனிடையே தோனியின் ட்ரேட்மார்க் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை நேற்று மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்ட்யா ப்ராவோ வீசிய பந்தில் ஆடினார்.அதனை கண்டு ரசித்த தோனி புன்முறுவல் பூத்தார்.தோனி புன்முறுவல் பூத்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.நெட்டிசன்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள்.