‘இது வேர லெவல் அவுட்டா இருக்கும் போல’.. அசத்திய புவனேஷ்வர்.. திகைத்து நின்ற ப்ரீத்வி.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 04, 2019 11:37 PM
டெல்லி கேபிடல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி20 லீக் 16 -வது போட்டி இன்று(04.04.2019) டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 43 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிரடியாக ஆடிய ஜானி பார்ஸ்டோவ் 28 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அசத்தினார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் புவனேஷ்வர்குமார், டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ப்ரீத்வி ஷாவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
