"என்னங்க இவரு சின்னப்புள்ள தனமா பண்ணிட்டு இருக்காரு..." 'கோலி'யை 'விமர்சனம்' செய்த முன்னாள் 'வீரர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து அணிகளிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

முதல் நாள் ஆட்டம் இன்று முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக, இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அவருக்கும், இந்திய கேப்டன் கோலிக்கும் சிறிதாக மோதல் நிலவியது.
இருவரும் மாறி மாறி வார்த்தைகளால் மோதிக் கொண்டிருந்த நிலையில், போட்டி நடுவர் வந்து இருவரையும் சமரசம் செய்து வைத்தார். இந்த சம்பவத்தால் போட்டிக்கு இடையே சிறிது பரபரப்பு நிலவியது. இந்நிலையில், இந்த மோதல் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் க்ரீம் ஸ்வான், வர்ணனையில் இருந்த போது கருத்து ஒன்றைக் கூறியுள்ளார்.
'கோலி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரிடையே நடந்த வாக்குவாதத்தை பார்க்கும் போது, முதலில் நட்பு ரீதியாலான மோதலாகவே தெரிந்தது. ஆனால், அதன்பிறகு நடுவர் வந்த போது, அப்படி தோன்றவில்லை. பேட்ஸ்மேன் பேச்சுக்கு நடுவே ஃபீல்டர் நிற்கும் ஒருவர் போய் பேசியிருக்கக் கூடாது. கோலி தனது விளையாட்டைத் தான் பார்க்க வேண்டும். இன்று அவரது செயலை பார்த்த போது, அந்த மொத்த சம்பவமும் சிறுபிள்ளைத் தனமாக இருந்தது' என ஸ்வான் விமர்சனம் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்
