VIDEO : "இப்டி எல்லாமா 'ரன்' எடுப்பாங்க??..." கடுப்பான 'கோலி'... 'நடுவரிடம்' பஞ்சாயத்து செய்த இந்திய 'கேப்டன்'... பரபரப்பு 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. முதல் நாள் முதலே இங்கிலாந்து அணியின் கை அதிகம் ஓங்கியிருந்த நிலையில், இந்திய அணி பந்து வீச்சிலும் சற்று சொதப்பியிருந்தது. இதனை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் போட்டிக்கு பின்னர் பேசும் போது ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அந்த அணி வீரர்கள் ரன்கள் எடுக்க ஓடினர். அப்போது களத்தின் நடுவே இங்கிலாந்து வீரர்கள் ஓடியதைக் கண்ட விராட் கோலி, கடும் அதிருப்தியடைந்தார்.
Credits-@/aumbetiroydo on insta
— Jay (@Aragorn_2_) February 8, 2021
உடனடியாக, களத்தில் இருந்த நடுவர் நிதின் மேனன் பெயரைக் குறிப்பிட்டு, 'அவர்கள் களத்தின் நடுவே, எளிதாக சிங்கிள் ரன்களை எடுக்கின்றனர்' என ஹிந்தியில் விராட் கோலி குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக கோலி பேசியிருந்த ஆடியோ, ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்த நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
