அவங்க 'ஜெயிச்சது' கூட பரவால்ல... ஆனா 'நீங்க' பண்ணது தான்... கொந்தளிக்கும் ரசிகர்கள் !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Jan 14, 2020 10:13 PM
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை, ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தவான், ராகுல் நன்றாக ஆடினாலும் அடுத்து வந்த வீரர்கள் சொதப்பியதால், இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், ஆரோன் பிஞ்ச் இருவரும் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
That's that from the Wankhede.
Absolute domination by the Australian openers as Australia win the 1st ODI by 10 wickets and go 1-0 up in the three-match series.
Scorecard - https://t.co/yur0YuDrGa #INDvAUS pic.twitter.com/VF05mP0kg7
— BCCI (@BCCI) January 14, 2020
இதனால் 37.4 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. வார்னர் 128 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 110 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இதன் மூலம் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தநிலையில் உலகின் தலைசிறந்த பவுலர்களை வைத்துக்கொண்டு, கோலி அணியால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லையா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.