“சிறந்த வீரர் ரோஹித்!”.. “சிறந்த கேப்டன் கோலி!”.. ட்ரெண்ட் ஆகும் ஐசிசி விருதுகள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jan 15, 2020 02:18 PM
2019-ஆம் ஆண்டின், சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர் விருது ரோகித் ஷர்மாவுக்கும், விராட் கோலிக்கு, ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதும் (Spirit of Cricket) அறிவிக்கப்பட்டுள்ளன. தவிர, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியாவின் பேட் கமின்ஸும், அனைத்துவிதமான போட்டிகளிலும் சிறந்த வீரராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2019-ஆம் ஆண்டு உலக கோப்பையில் மட்டும் 5 சதங்களை விளாசித் தள்ளியதால் ரோகித்துக்கு இந்த விருதும், அதே ஆண்டு ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் கேலி செய்தபோது, அதைத் தடுத்தமைக்காக கோலிக்கு இந்த விருதும் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐசிசியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாகவும் கோலி தேர்வாகியுள்ளார்.
