‘யார் வற்புறுத்தினாலும் ஓய்வு பெறமாட்டேன்’.. சீனியர் ஆல்ரவுண்டர் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jan 15, 2020 08:14 AM
வங்கதேச கிரிக்கெட் வீரர் மோர்தசா, யார் வற்புறுத்தினாலும் ஓய்வு பெற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மோர்தசா. ஆல்ரவுண்டரான இவரை வங்கதேச அணி வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது. இதுகுறித்து தெரிவித்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன், மோர்தசா எங்களிடம் போனில், வீரர்களுக்கான தேசிய ஒப்பந்ததில் இருக்க விருப்பம் இல்லை என்றார். மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினார். அவருக்கு நாங்கள் பிரியாவிடை கொடுக்க விரும்பினோம். தற்போது அவருக்கு அதில் ஆர்வம் இல்லை. அதற்கு உள்ளூர் கிரிக்கெட்டாக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்த மோர்தசா, கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முடிவெடுப்பது என்னுடைய சொந்த விஷயம். நான் தேசிய அணிக்காக விளையாட விரும்புகிறேன் என எப்போது கூறினேன். என்னுடைய தேசிய ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. தற்போது அதில் நான் இல்லை. கிரிக்கெட் போர்டு என்னை கேப்டனா வைத்திருக்குமா? இல்லை அணியில் சேர்க்குமா? என்பது குறித்து நான் சிந்திக்கவில்லை. கிரிக்கெட் வாரியம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கினாலும் அதை ஏற்பேன். நான் எங்கே விளையாட விரும்புகிறேன் என்ற முடிவை எடுக்க எனக்கு முழு சுதந்திரம் உள்ளது. யார் வற்புறுத்தினாலும் ஓய்வு பெறமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
