darbar USA others

VIDEO: ரிஷப் பந்துக்கு பதிலா விக்கெட் கீப்பிங் செஞ்ச ராகுல்..! பேட்டிங் பண்ணும்போது என்ன ஆச்சு ரிஷப்புக்கு..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jan 14, 2020 09:37 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்துக்கு பதிலாக கே.எல்.ராகுல் கீப்பிங் செய்தார்.

KL Rahul wicket keeping for India after Rishabh Pant suffers

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (14.01.2020) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினர். இதில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 10 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் (74) மற்றும் கே.எல்.ராகுல் (47) கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த கேப்டன் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து அவுட்டாக 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 255 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 37.4 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 128 ரன்களும், ஆரோன் ஃபின்ஞ் 110 ரன்களும் எடுத்து அசத்தினர்.

இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஃபீல்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் வீசிய 44-வது ஓவரின் 2-வது பந்தை ரிஷப் பந்த் எதிர்கொண்டார். ஆனால் பந்து அவரின் பேட்டின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டில் பலமாக தாக்கியது. இதனால் அவர் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. அதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார்.