இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > இந்தியா1. இந்திய கேப்டன் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் (5 கோடி) மக்கள் பின்தொடர்கின்றனர். இந்தியர் ஒருவர் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை பெறுவது இதுவே முதன்முறை.
2. காசி மஹாகால் விரைவு ரயிலில் சிவனுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லை என ஐ.ஆர்.சி.டி.சி விளக்கம் அளித்துள்ளது.
3. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 74.68 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ. 68.27 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
4. அரசுக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகையை ஒரே இரவில் செலுத்துமாறு கட்டாயப்படுத்தினால், நிறுவனத்தை இழுத்து மூடுவதைத் தவிர வோடபோனுக்கு வேறு வழி இல்லை என்று அதன் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ((Mukul Rohatgi)) கூறியுள்ளார்.
5. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது பெரிய நாடாக மாறுவதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
6. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் இலவச வைஃபை சேவையை நிறுத்திக் கொள்ள கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
7. குஜராத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை நடத்திய கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்.
8. ஜெட் பேக் எனப்படும் நவீன இயந்திரம் மூலம் இதுவரை மனிதர்கள் பறக்காத உயரத்தை இளைஞர் ஒருவர் எட்டியுள்ளார். மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த அவர், புதிய உச்சமாக சில நொடிகளில் 6 ஆயிரம் அடி உயரத்தைத் தாண்டிச் சென்றார்.
9. இட ஒதுக்கீடு என்பது பிச்சை எடுப்பது போன்றது அல்ல என்றும் அது அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டது என்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியிருக்கிறார்.
10. தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த, கல்வி கட்டணத்தை விட, கூடுதலாக வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
11. கொரானா மையப்புள்ளியான ஊகானில் எஞ்சியுள்ள இதர இந்தியர்களும் இந்த வார இறுதியில் மீட்கப்பட உள்ளனர். மாலத்தீவுகளைச் சேர்ந்த 7 பேர் மற்றும் 647 இந்தியர்கள் இது வரை இரண்டு தடவைகளாக மீட்கப்பட்டுள்ளனர்.