‘ஒரு படி கீழே இறங்கிய கோலி’.. ‘2-வது இடத்தை பிடித்த ராகுல்’.. அப்போ முதல் இடம்..? வெளியான தரவரிசை பட்டியல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 18, 2020 12:35 PM

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ICC T20 Rankings Virat Kohli drops to 10, KL Rahul retain 2nd spot

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் அதிரடியாக விளையாடி, பேட்டிங்குக்கான தரவரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறினார். இதனால் 9-வது இடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே நேரத்தில் நடந்த முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரன ரோஹித் ஷர்மா 662 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருந்து வருகிறார். பந்து வீச்சுக்கான தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 12-வது இடத்தில் நீடிக்கிறார். இதில் பேட்டிங்குக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் இளம்வீரர் பாபர் அஸாம் 879 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறார்.