'ஜாம்பவான்களை மிஞ்சும் மிரட்டல் அடி'... '14 வயதிலேயே தெறிக்கவிடும் மகன்’... ‘2 மாதத்தில் 2 இரட்டை சதம்’... யார் தெரியுமா?..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 19, 2020 01:48 PM

14 வயதுக்குட்பட்ட மண்டல போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் மகன், 2 மாதத்தில் 2 இரட்டை சதம் அடித்து அசத்தி அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

Samit son of Rahul Dravid\'s slams another Double Century

இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான ராகுல் டிராவிட், இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். இந்திய அணியில் ஆடிய காலத்தில் எந்த ஒரு சுயநலமும் இன்றி அணிக்காக மட்டுமே சிறப்பாக ஆடிய அவர், தற்போது இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவராகவும் தொடர்ந்து கிரிக்கெட்டுக்காக பணியாற்றி வருகிறார். இவரது பயிற்சியில், கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற எண்ணற்ற வீரர்களை உருவாக்கி இருக்கிறார்.

இந்நிலையில் இவரைப் போலவே இவரது மகன் சமித், தூணாக நின்று அணியை வெற்றிபெற செய்ததுடன், 2 மாதங்களில் இரட்டை சதம் அடித்து சாதித்துள்ளார். கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த பி.டி.ஆர். ஷீல்டு 14 வயதுக்குட்பட்ட மண்டல போட்டியில், 146 பந்துகளில் 33 பவுண்டரிகளுடன் அவர் 204 ரன்கள் குவித்தார்.  சமித்தின் இந்த ஆட்டத்தால் அவரது அணி 3 விக்கெட் இழப்புக்கு 377 ரன் (50 ஓவர்) குவித்தது.

அடுத்து ஆடிய ஸ்ரீகுமரன் அகாடமி அணி 110 ரன்னில் சுருண்டது. இதனால் சமித் அணி 267 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகளையும் சமித் வீழ்த்தியுள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 வயதினருக்கு நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியிலும் 201 ரன்கள் அடித்து இரட்டை சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #KLRAHUL #CRICKET #RAHUL DARVID #SAMIT