"நடுவரிடம் கோபப்பட்டாரா தீபக் ஹூடா?".. முடிவால் கடுப்பான வீரர்.. பரபரப்பு சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்காளதேச சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்த நிலையில், ஒரு நாள் தொடரை இழந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. மூன்று டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி 20 தொடரின் இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்கள் ஒரு சிலருக்கும் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுப்மன் கில் மற்றும் சிவம் மாவி உள்ளிட்டோர் டி 20 போட்டியில் அறிமுகமாகி இருந்தனர்.
தொடர்ந்து, முதல் டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக ஆடி ரன் சேர்க்க, எந்த அணி வெற்றி பெறும் என்ற விறுவிறுப்பு கடைசி ஓவர் வரை இருந்துது.
இறுதி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரை அக்சர் படேல் வீசி இருந்தார். அந்த ஓவரில் ஒன்பது ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களும் செல்ல, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. தீபக் ஹூடா அதிரடியாக ஆடி ரன் எடுத்திருந்த நிலையில் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நடுவரிடம் தீபக் ஹூடா கோபப்பட்டது தொடர்பான விஷயம், பெரிய அளவில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 18 ஆவது ஓவரை இலங்கை வீரர் கருண் ரஜிதா வீசி இருந்தார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்து ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்றது. இந்த பந்தை எதிர்கொண்ட தீபக் கூட சற்று ஆப் சைடு ஏறி நின்றதாக தெரிகிறது. இந்த பந்துக்கு வைடு கொடுக்காத நிலையில், பந்து வெளியே சென்றதாக கூறி நடுவரிடம் முறையிடுகிறார் தீபக் ஹூடா. மேலும் கோபத்தில் சில வார்த்தைகளையும் அவர் நடுவரை நோக்கி கூறியதாக தெரிகிறது.
இது தொடர்பான வீடியோக்கள், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Also Read | "விராட், ரோகித்தால மட்டும் உலக கோப்பைய ஜெயிக்கவே முடியாது".. ஸ்ட்ராங்கா கபில் தேவ் சொன்ன வார்த்தை!!