யம்மாடி என்ன ஸ்பீடு.. உம்ரான் மாலிக்கின் தீயான பவுலிங்.. மொத்த ரெக்கார்டும் காலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இந்தியாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதலாவதாக டி 20 தொடர் நடந்து முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற, மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் நிலை உருவாகி இருந்தது.
அப்படி ஒரு சூழலில் நடந்த கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ், பந்துகளை நாலாபுறமும் அடித்து நொறுக்கி சதமடித்த அவர், மிகவும் கடினமாக பறந்தும், படுத்தும் என ஷாட்களை அடித்து மைதானத்தில் இருந்த அனைவரையும் அசர வைத்திருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், கவுஹாத்தி மைதானத்தில் நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் எடுத்ததால், சிறப்பான ஸ்கோரை எட்டவும் வழி செய்திருந்தது. அதிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 87 பந்துகளில் 12 ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார். துவக்க ஆட்டகக்காரர்களான ரோஹித் 83 ரன்களும், கில் 70 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இருப்பினும், 50 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்யும்போது 14 வது ஓவரை உம்ரான் மாலிக் வீசினார். அப்போது மணிக்கு 156 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பந்து வீசி இருந்தார். இந்திய வீரர் வீசிய அதிகபட்ச வேகமான பந்து இதுவாகும். இதற்கு முன்னதாக T20 போட்டிகளில் உம்ரான் மாலிக் மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
Also Read | கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்.. இப்படி ஒரு சோகமான சாதனையா.?.. முழு விபரம்..!