ரோஹித் ஷர்மாவை நேர்ல பார்த்ததும் கண்கலங்கிய குட்டி ரசிகர்.. கன்னத்தை கிள்ளி சமாதானப்படுத்திய ரோஹித்.. க்யூட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதன்னை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழுத சிறுவனை ரோஹித் ஷர்மா சமாதானப்படுத்தும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. T20 தொடர் நடைபெற்று வந்த நிலையில் இதனை இந்தியா வென்றிருக்கிறது. முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் இலங்கையும் வெற்றிபெற்ற நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் இறுதி மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் தொடர் துவங்குகிறது. முதல் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்பட இருக்கிறார். முன்னதாக வங்க தேசம் அணியுடனான தொடரில் கையில் காயமடைந்த ரோஹித் ஷர்மா சிகிச்சையில் இருந்தார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இடைவெளிக்கு பிறகு ரோஹித் ஷர்மா மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. இன்றைய போட்டி நடைபெறும் கவுகாத்தி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோஹித் பின்னர் ரசிகர்களை சந்தித்தார். அப்போது, ரோஹித் ஷர்மா சிறுவன் ஒருவனை கொஞ்சிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் இடத்துக்கு ரோஹித் ஷர்மா செல்கிறார். அப்போது, அங்கு நிற்கும் சிறுவன் கண்கலங்கவே, ரோஹித் அந்த சிறுவனது கன்னங்களை கிள்ளி சமாதானம் செய்கிறார்.
அப்போது ரோஹித்,"நீ ஏன் அழுகிறாய்? உன்னுடைய கண்ணங்கள் அழகாக இருக்கின்றன. அழுகையை நிறுத்து" என்கிறார். தொடர்ந்து அவர் சமாதானப்படுத்தவே, அதன் பின்னர் அந்த சிறுவன் சிரிக்கிறான். இதனை கண்டு அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் புன்னகை செய்கின்றனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக பரவி வருகிறது.
A kid started crying when he saw his idol Rohit Sharma in Assam. pic.twitter.com/cWFV7F6s3m
— Johns. (@CricCrazyJohns) January 9, 2023

மற்ற செய்திகள்
