VIDEO: சிறப்பாக சென்று கொண்டிருந்த 'மேட்ச்'... திடீரென மோதிக் கொண்ட 'கோலி' - 'ஸ்டோக்ஸ்'... - சமரசம் செய்ய சென்ற நடுவரால் பரபரப்பு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் இடையே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது கடும் வாக்குவாதம் நடந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து தொடக்க பேட்ஸ்மேன்களாக கிராவ்லியும், சிப்லேவும் களமிறங்கினர். இதில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் முதலில் சிப்லே அவுட் ஆனார்.
இந்த நிலையில், நிலைத்து நின்று விளையாட எண்ணிய கிராவ்லியும் வெறும் 9 ரன்களில் அக்ஸர் படேல் வீசிய ஸ்பின் பந்தில் அவுட்டானார். இதனையடுத்து அணியின் உச்சக்கட்ட பலமாக இருக்கும் கேப்டன் ஜோ ரூட் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
கேப்டன் ஜோ ரூட் அவுட்டானதும் பென் ஸ்டோக்ஸ் களத்துக்கு வந்தார். அப்போது இந்திய பவுலர் முகமது சிராஜ் சரமாரியாக பவுன்சர் பந்துகளை பென் ஸ்டோக்ஸ்க்கு போட்டார். இதன்காரணமாக, முகமது சிராஜ் பென் ஸ்டோக்ஸிடம் சென்று ஏதோ கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கோலியும் அவரிடம் ஏதோ பேச இருவருக்குமான வாக்குவாதம் தீவிரமானது. இதனையடுத்து நடுவர்கள் தலையிட்டு இரண்டு பேரையும் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.
Conversation between Kohli and Stokes 😳 pic.twitter.com/ds55PVGV7A
— Vijay Jaiswal (@puntasticVU) March 4, 2021

மற்ற செய்திகள்
