'சுண்டக்காய் பறிக்குறதுல நடந்த சண்டை...' 'ஆனா இந்த அளவுல கொண்டு விடும்னு யாருமே நினைக்கல...' - சாப்பாடு எடுத்திட்டு வரேன்னு சொன்னது தான் கடைசி வார்த்தை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுண்டைக்காய் தகராறில் விபரீத முடிவு எடுத்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராஜா நகர் சிறுவர் பூங்காவின் பின்பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷின் மகள் பெயர் சினேகா, நேற்று(15-09-2020) தனது வீட்டின் பின்பக்கம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் அருகே இருந்த சுண்டைக்காய் செடியில் காய்த்துள்ள சுண்டைக்காயை பறித்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கொளஞ்சி என்பவர் சினேகாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் சினேகாவையும் அவரது தம்பியையும் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஷத்தை கேள்விப்பட்டு வந்த சினேகாவின் தந்தை சுரேஷ் மற்றம் தாய் சுமதியும் கொளஞ்சியிடம், பொது இடத்தில் வளர்ந்த செடியில் காய்த்த சுண்டக்காயை பறித்ததற்கு ஏன் எனது பிள்ளைகளை அடித்தீர்கள் என கேட்டதால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின் போது ஆத்திரமடைந்த கொளஞ்சியும், அவரது மகனும் சுரேஷின் குடும்பத்தினரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியவாறே கையில் உள்ள இரும்பு கம்பியால் கடுமையாக அடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்குவந்த சுரேஷின் உறவினரான சீதாராமன் என்பவர் சண்டையை தீர்த்து வைக்க சென்றுள்ளார். அப்போது அவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமுற்ற சுரேஷின் குடும்பத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்த நிலையில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பொதுவெளியில் ஏற்பட்ட அவமானத்தால் மனமுடைந்த சுரேஷ் நேற்று மாலை வீட்டிற்கு சென்று உணவு எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார்.
பின்பு மது அருந்தி விட்டு வீட்டிற்குச் சென்றவர் அதீத மன உளைச்சலுக்கு ஆளாகி தவறான முடிவை தேடிக்கொண்டார். இதனையடுத்து அவரை உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். உடல்நிலை மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற செய்திகள்
