'கடைசி வரைக்கும் அவர் இறந்தது தெரியாமலே'.. சித்தார்த்தாவின் மரணத்தைத் தொடர்ந்து, குடும்பத்தைச் சூழும் சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 26, 2019 12:27 PM

கர்நாடகத்தின் சிக்மங்களூரைச் சேர்ந்த கங்கையா மற்றும் வஸந்தி தம்பதியருக்கு பிறந்த மூத்த மகன் சித்தார்த்தா.

Cafe Coffee day tycoon VG Siddharthas Father Passed away

கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் சித்தார்த்தா, தன் தந்தை கங்கையா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றதோடு, அவர் கோமா நிலையில் இருந்ததைக் கண்டு மனம் வெதும்பி அழுததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிச்சிக்குள்ளாகியது.

முன்னதாக சித்தார்த்தாவின் தற்கொலைக்கும் 15 நாட்களுக்கு முன்னால்தான், தன் தந்தையை சென்று பார்த்துவிட்டு சித்தார்த்தா, அப்போது, தனது தாய் தந்தைக்கு திருமணம் ஆகி, தாமதமாக, குழந்தைகளாகிய தாங்கள் பிறந்ததாகவும் கூறியிருந்தார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கடின உழைப்பு இருந்தாலும், வணிக ரீதியான சிறந்ததொரு வலிமையான நிறுவனமாக கஃபே காபி டே வை உருவாக்க முயன்று, ஆனால் அதில் தோற்றதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் சித்தார்த்தா.

இந்த நிலையில், கோமாவில் இருந்த சித்தார்த்தாவின் தந்தை கங்கையா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது அக்குடும்பத்தை மேற்கொண்டு துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #VGSIDDHARTHA #CAFECOFFEEDAY