அட்டகாசமான 'ஆல்ரவுண்டரை' தூக்கிய பஞ்சாப்.. இனி டீமோட 'கேப்டனும்' அவர் தானாம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 14, 2019 02:49 PM

அஸ்வினை டெல்லி அணிக்கு விட்டுக்கொடுத்த பஞ்சாப் அங்கித் ராஜ்புத்தை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக்கொடுத்து ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதமை வாங்கியுள்ளது. அதேபோல மும்பை அணி ராஜஸ்தான் அணியிடம் இருந்து தவல் குல்கர்னியை விலைக்கு வாங்கியுள்ளது.

IPL 2020: Krishnappa Gowtham heads to Kings XI Punjab

முன்னதாக அஸ்வினை தொடர்ந்து கே.எல்.ராகுலை கேப்டனாக பஞ்சாப் அணி நியமிக்கும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் கவுதமை பஞ்சாப் அணி புதிய கேப்டனாக நியமிக்க இருக்கிறதாம். கடந்த ஆண்டு 6.2 கோடிகள் கொடுத்து கவுதமை ராஜஸ்தான் அணி வாங்கியது.

ஆனால் இந்த ஆண்டில் ஸ்ரேயாஸ் கோபாலுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்ததால் கவுதமுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவரை பஞ்சாப் அணிக்கு ராஜஸ்தான் விற்பனை செய்துள்ளது. அதே நேரம் கர்நாடக பிரீமியர் லீக், சையது முஷ்டாக் அலி டிராபி, தியோதர் டிராபி என தொடர்ந்து விளையாடிய கவுதம் தற்போது முரட்டு பார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #CRICKET #IPL