அஸ்வினைத் தொடர்ந்து 'பிரபல' அணியின்.. முன்னாள் 'கேப்டனை'யும் வளைத்துப்போட்ட டெல்லி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 14, 2019 11:05 AM

வருகின்ற 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் உண்மையிலேயே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. காரணம் முக்கிய அணிகள் பலவும் பிற அணிகளில் உள்ள ஸ்டார் பிளேயர்களை தங்கள் அணிக்கு வாங்கி வருகின்றன.

IPL 2020: Ajinkya Rahane to leave Rajasthan Royals

சமீபத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினை டெல்லி அணி வாங்கியது. நேற்று யாரும் எதிர்பாராத விதமாக தங்கள் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்டை மும்பை அணிக்கு விற்பனை செய்தது. இந்தநிலையில் ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கியா ரஹானேவை இன்று டெல்லி அணி வாங்கி இருக்கிறது.

தங்கள் அணியின் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டின் பலத்தை அதிகரிக்கும் வகையில் டெல்லி அணி தொடர்ந்து பிற அணியின் முக்கிய வீரர்களை வாங்கி வருகிறது. கடந்த 9 சீசன்களாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த ரஹானே கடந்த ஆண்டு அணியின் கேப்டனாகவும் இருந்தார். ஆனால் பாதியில் அவரின் கேப்டன் பதவியை ராஜஸ்தான் அணி பறித்து ஸ்டீவ் ஸ்மித்திடம் கொடுத்தது.

இந்தநிலையில் இன்று வீரர்களை வாங்குவது, விற்பனை செய்வதற்கு கடைசிநாள் என்பதால் ரஹானேவை இரண்டு வீரர்களை விட்டுக்கொடுத்து டெல்லி அணி வாங்கியுள்ளது. இதுதவிர ரஹானேவின் ஏலத்தொகையான 4 கோடி ரூபாயையும் டெல்லி அணி அவருக்கு கொடுக்க வேண்டியது இருக்கும்.

Tags : #CRICKET #IPL