“களமிறங்கினார் ஜூனியர் இம்ரான் தாஹிர்”!... மகனுக்கு பயிற்சி அளிக்கும் இம்ரான்! வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | May 06, 2019 04:28 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் இம்ரான் தாஹிர் தனது மகனுக்கு பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் தற்போது நடைப்பெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இம்ரான் தாஹிர் போட்டியின் போது விக்கெட் எடுத்தால் சந்தோஷத்தில் மைதானத்தில் ஓடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்ல பெயரும் இருக்கிறது.
மேலும், இவர் மைதானத்தில் ஓடுவதை மற்ற வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதை பார்த்து ரசிப்பார்கள். இந்நிலையில், இம்ரான் தாஹிர் மைதானத்தில் தனது மகனுக்கு பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Training for the super #ParasakthiExpress is ON! Daddy lessons! #WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/mLG25XroF3
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2019
அதில், இம்ரான் தாஹிர் பந்தை தூக்கிபோட்டு அதை எடுத்து வீச சொல்லி பயிற்சி கொடுக்கிறார். தற்போது இந்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.
