தவானுக்கு பதில் அணிக்கு வரும் புதிய வீரர்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 12, 2019 10:59 AM
ஷிகர் தவான் காயம் அடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் சுற்றில் விளையாடிய போது இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு கைவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் 3 வாரங்களுக்கு உலகக்கோப்பை தொடரில் அவர் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதனை அடுத்து தவானுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனால் 4 -வது ஆர்டரில் விளையாடப்போகும் வீரர்கள் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதில் ஏற்கனவே அணியில் உள்ள தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் 4 -வது ஆர்டரில் விளையாட இளம் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட் இல்லாதது சர்ச்சை கிளப்பியது. அதனால் காயம் அடையும் வீரருக்கு மாற்றுவீரராக களமிறங்கும் வீரர்களில் பட்டியலில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். இதனால் வருயிருக்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட ரிஷப் பண்ட் இங்கிலாந்து செல்ல இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
