'அபிநந்தனை வைத்து இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான்?'... 'டி.வி. விளம்பரத்தால் புதிய சர்ச்சை'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 11, 2019 06:35 PM

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை வைத்து, இந்திய அணியை சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று வெளியிட்டுள்ள விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Pakistan TV airs spoof on Abhinandan Varthaman as Cricket World Cup ad

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் ஜூன் 16-ம் தேதி, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை வைத்து, இந்திய வீரர்களை சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று விளமபரத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுக்கும்போது,  இந்திய போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். அப்போது அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து வீடியோ ஒன்று, பாகிஸ்தான் ராணுவத்தால் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகப் பரவியது. பின்னர் இரண்டு நாட்களில் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

தற்போது பாகிஸ்தானில் உலகக் கோப்பை போட்டிகளை டிவி சேனல் ஒன்று ஒளிபரப்பி வருகிறது. அதில் 'விமானி அபிநந்தனைப் போலவே சித்தரிக்கப்பட்டு, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற உடை அணிவித்து, அபிநந்தனின் புகழ்பெற்ற பதிலை கூறுவதுப்போல் வைத்துள்ளது. இறுதியில் அவரை போகச் சொல்லும் போது, அவர்கள் கிண்டல் செய்வதுடன் விளம்பரம் முடிவடைகிறது'. இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.