'தோனிக்கு மாற்றா???'... 'ஷாக் கொடுத்த WEIGHT பிரச்சனை'... 'என்னதான் காரணமென ரிப்போர்ட் கேட்கும் BCCI?!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் தோனிக்கு மாற்றாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்திற்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி, மும்பை உள்ளிட்ட அணிகள் சிறப்பாக ஆடி வந்த நிலையில், தொடக்கத்தில் வரிசையாக அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்ற டெல்லி அணி தற்போது அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருகிறது. அதிலும் டெல்லி அணியில் நம்பிக்கை அளித்த ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ப்ரித்வி ஷா என யாருமே இப்போது சரியாக ஆடாத நிலையே உள்ளது. குறிப்பாக டெல்லி அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் தொடக்கத்தில் சில போட்டிகளில் நன்றாக பேட்டிங் செய்தபோதும் அதன்பின் எந்த போட்டியிலும் சரியாக ஆடாமல் மோசமான ஷாட்களை ஆடி அவுட்டானார்.
மேலும் இடையில் ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மோசமாக அவதிப்பட்டார். இதனால் 2 போட்டிகளில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவரால் வேகமாக ஓட முடியாத நிலை இருந்தது. ரிஷப் பந்த்தின் உடல் எடை காரணமாக வேகமாக ஓட முடியாமல் கஷ்டப்பட்டதாக கூறப்பட்டபோதும் அவர் டெல்லி அணிக்குள் எடுக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தற்போது ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் தேர்வாக வாய்ப்பு இல்லை எனவே கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ள சூழலில் அதற்கான வீரர்களை தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில்தான் அணியில் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாமென பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அத்துடன் அவருடைய உடல் எடை அதிகரித்துள்ளதே அதற்கு முக்கியமான காரணமாகவும் கூறப்படுகிறது. அதனால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ நினைப்பதாகவும், அவருடைய உடல் எடை அதிகரிக்க என்ன காரணம், அவருடைய பிட்னஸ் எப்படி இருக்கிறது என்பது குறித்து கேள்வி எழுப்பி பிசிசிஐ இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
