"சுத்தி எங்க பாத்தாலும்... 'வாத்தி கம்மிங்' மேனியா தான் போல..." அச்சு அசலாக அப்படியே 'மூவ்மன்ட்ஸ்' போட்ட 'சிறுமி'... வைரல் 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகர் விஜய் நடிப்பில், சமீபத்தில் வெளியாகியிருந்த திரைப்படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு, மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்திருந்தது.

அது மட்டுமில்லாமல், அனிருத் இசையில் உருவாகியிருந்த அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்திருந்தது. அதிலும் குறிப்பாக, 'வாத்தி கம்மிங்' பாடல், அனைவரின் பேவரைட் டியூனாக அமைந்தது. மேலும், இந்த பாடலிற்கு, சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் நடனமாடி இருந்தது அதிகம் வைரலாகி இருந்தது. அதே போல, ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூட இந்த பாடலை வைத்து, வீடியோ உருவாக்கி வெளியிட்டிருந்தது.
மேலும், நடிகை நஸ்ரியா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கூட, இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், சிறுமி ஒருவர், வாத்தி கம்மிங் பாடலில் விஜய் ஆடும் நடன அசைவுகளை அப்படியே ஆடி அசத்தியுள்ளார். எந்த இடத்திலும், சிறு தவறு கூட இல்லாமல், அப்படியே விஜய் ஆடுவதை அதே முக பாவனைகளுடன் சிறுமி ஆடியுள்ளார்.
This kid.. 👌 #VaathiComing #VaathiMANIAEverywhere #Master pic.twitter.com/yVKu6DygTv
— Vinith❤Tammy (@Vinisayzz) March 8, 2021
இது தொடர்பான வீடியோ, தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. படம் மற்றும் பாடல் வெளியாகி பல நாட்களாகியும், இந்த 'வாத்தி கம்மிங்' மேனியா இன்னும் குறையவில்லை என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
