'ஐபிஎல்' வரை சென்ற 'வாத்தி கம்மிங்'... பிரபல 'டீம்' ஷேர் செய்த அசத்தல் 'வீடியோ'... இப்போ இது தான் செம 'டிரெண்டிங்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றிருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதனையடுத்து, ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டிருந்தது. அதன் படி, ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகிறது. மே 30 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தங்களது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஏப்ரல் 12 ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்டீவ் ஸ்மித்தை அந்த அணி ஏலத்திற்கு முன்பாக விடுவித்திருந்த நிலையில், ஸ்மித்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இந்த முறை சஞ்சு சாம்சன் செயல்படவுள்ளார்.
நேற்று ஐபிஎல் அட்டவணை வெளியான பிறகு, ராஜஸ்தான் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் வரும் 'வாத்தி கம்மிங்' பாடல் வீடியோவை எடிட் செய்து சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஜோஸ் பட்லர், கிறிஸ் மோரிஸ் ஆகியோயரின் முகத்தை வைத்து வெளியிட்டது.
V̶a̶a̶t̶h̶i̶ IPL coming! 😍#HallaBol | #IPL2021 | #VaathiComing | @IamSanjuSamson | @ParagRiyan | @Tipo_Morris | @josbuttler pic.twitter.com/CLi0mlJ7Dk
— Rajasthan Royals (@rajasthanroyals) March 7, 2021
ஏற்கனவே, வாத்தி கம்மிங் பாடலுக்கு இந்திய வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா, ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ், சச்சின் பேபி உள்ளிட்ட பலர் நடனமாடியிருந்த வீடியோ, ரசிகர்களிடையே அதிகம் வைரலாகியிருந்ததைப் போல இந்த வீடியோவும் நெட்டிசன்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது
ஒரு ஐபிஎல் அணியே தற்போது விஜய்யின் பாடலை குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் 'வாத்தி கம்மிங்' பாடல் இன்னும் ஹிட்டடித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

மற்ற செய்திகள்
