‘தளபதி’ ஸ்டெப் போட்ட ‘சின்ன தல’ .. BEHINDWOODS விருது விழாவில் ‘செம’ சர்ப்ரைஸ் கொடுத்த ரெய்னா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா, Behindwoods Gold Icons விருது வழங்கும் விழாவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 7-ம் தேதி Behindwoods Gold Icons - டிஜிட்டல் மற்றும் டெலிவிஷன் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் டிஜிட்டல், தொலைக்காட்சி, சமூகம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் பலருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவுக்கு THE GOLDEN GLOBAL ICON OF INSPIRATION - SPORTS பிரிவில் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை சுரேஷ் ரெய்னாவுக்கு மாஸ்டர் பட இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்பித்தார். இதன்பின்னர் மாஸ்டர் படத்தில் இடம்பெற்று தற்போது வரை டிரெண்டிங்கில் இருக்கும் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு சுரேஷ் ரெய்னா நடனமாடினார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின், ஹர்திக் பாண்ட்யா, குல்திப் யாதவ் உள்ளிட்டோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
