"என் புருஷனுக்கு 'டான்ஸ்' சொல்லி கொடுங்கய்யா..." 'கொல்கத்தா' அணியிடம் 'கோரிக்கை' வைத்த பிரபல 'கிரிக்கெட்' வீரரின் 'மனைவி'... வைரலாகும் 'கமெண்ட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 15, 2021 07:22 PM

14 ஆவது ஐபிஎல் தொடர் இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் வைத்து நடைபெற்றிருந்தது.

ben cutting wife erin holland request to kkr team gone viral

இந்த ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் பென் கட்டிங்கை (Ben Cutting), அவரது அடிப்படை தொகையான 75 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. கொல்கத்தா அணியிலுள்ள அதிரடி வீரர் ரசலைப் போல, பென் கட்டிங்கும் சிறப்பாக ஆடுவார் என்பதால், நிச்சயம் அவர் அணியில் இணைநதுள்ளது, கொல்கத்தா அணிக்கு பலத்தைச் சேர்க்கும் என கருதப்படுகிறது.

ben cutting wife erin holland request to kkr team gone viral

முன்னதாக, பென் கட்டிங் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான எரின் ஹாலண்ட் (Erin Holland) என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் நிச்சயதார்த்தம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றிருந்த போதும், கொரோனா தொற்று காரணமாக இரண்டு முறை அவர்களது திருமணம் தள்ளிப் போயிருந்தது.

ben cutting wife erin holland request to kkr team gone viral

இந்நிலையில், பென் கட்டிங் மற்றும் அவரது மனைவி எரின் ஹாலண்ட் ஆகியோரை தங்களது அணிக்கு வரவேற்கும் விதமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் திருமண வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.  தங்களது திருமணத்தின் போது, புதுமண தம்பதிகள் நடனமாடும் வீடியோ அதில் இடம்பெற்றிருந்தது.

ben cutting wife erin holland request to kkr team gone viral

இந்த வீடியோவை கொல்கத்தா அணி வெளியிட்டதும், பென் கட்டிங் - எரின் ஹாலண்ட் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

அப்போது தனது கணவர் குறித்து, எரின் ஹாலண்ட் செய்த கமெண்ட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கொல்கத்தா அணிக்கு நன்றியை தெரிவித்த எரின், 'உங்களது குடும்பத்தில் ஒரு அங்கமானதற்கு மகிழ்ச்சி. தயவு செய்து யாராவது அவர்களுக்கு (பென் கட்டிங்) சிறந்த நடன அசைவுகளை கற்றுக் கொடுக்க முடியுமா?' என கமெண்ட் செய்துள்ளார்.

ben cutting wife erin holland request to kkr team gone viral

 

ben cutting wife erin holland request to kkr team gone viral

தனது கணவர் பென் கட்டிங்கின் நடனத்தை கிண்டல் செய்து அவரது மனைவியே செய்த கமெண்ட், தற்போது ரசிகர்களிடையே அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ben cutting wife erin holland request to kkr team gone viral | Sports News.