"கோலியை தவிர எந்த பேட்ஸ்மேன் இருந்திருந்தாலும் அந்த போட்டியில பாகிஸ்தான் தான் ஜெயிச்சிருக்கும்" - மிஸ்பா உல் ஹக்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பையில் டி20 தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசியிருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மிஸ்பா உல் ஹக்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | போடு.. அமெரிக்காவையே திரும்பி பார்க்க வச்ச நாட்டு நாட்டு பாடல்.. இயக்குநர் ராஜமௌலி பகிர்ந்த வீடியோ..!
உலகக்கோப்பை T20
சமீபத்திய உலகக்கோப்பை T20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. சூப்பர் 12 சுற்றின் முடிவுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது. அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக், லீக் போட்டியில் இந்திய அணியுடன் விளையாடியபோது நடந்த ஒரு சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். லீக்கின் ஒரு போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது இந்தியா. 160 ரன்களை இலக்காக கொண்டு சேசிங் செய்த இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. அப்போது விராட் கோலி நிதானமாக விளையாட துவங்கினார்.
Images are subject to © copyright to their respective owners.
கோலி செஞ்ச சம்பவம்
விராட் கோலி மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருந்தன. அத்தனைக்கும் தான் தகுதியானவர் என நிரூபித்தார் கோலி. கிட்டத்தட்ட இந்தியா தோற்றுவிட்டது என்ற நிலையில், பாண்டியாவுடன் இணைந்து கோலி காட்டிய வானவேடிக்கைகள் கிரிக்கெட் வரலாற்றில் ஏனென்றும் நிலைத்திருக்க போகிறது. உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு தனது பேட்டால் பதில் சொன்னார் கோலி. அந்தப் போட்டியில் 53 பந்துகளை சந்தித்த கோலி 82 ரன்களை விளாசி இந்தியாவுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். கோலியின் அந்த இன்னிங்ஸ் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நினைவுகூரத்தக்கது. குறிப்பாக ஹாரிஸ் வீசிய 19-வது ஓவரில் கோலி அடித்த அந்த சிக்ஸ் அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது.
Images are subject to © copyright to their respective owners.
மிஸ்பா உல் ஹக்
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் இந்த போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர்,"அவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் வேறு எந்த சிறந்த பேட்ஸ்மேன்களும் திணறிவிடுவார்கள். அசாத்தியமான மன உறுதி, என்ன ஆனாலும் வெற்றிபெற வேண்டும் என்ற மனதிடம் ஆகியவை இருக்கும் உலகின் தலைசிறந்த வீரர்களால் மட்டுமே இப்படி ஒரு இன்னிங்க்ஸை ஆட முடியும்.
Images are subject to © copyright to their respective owners.
அப்படியான வீரராக கோலி வெகுகாலம் இருந்து வருகிறார். அந்த இன்னிங்க்ஸை நான் ஆச்சர்யத்துடன் பார்த்தேன். அவரை தவிர வேறு எந்த பேட்ஸ்மேன் பேட்டிங் செய்திருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்க முடியாது. இதனால் தான் அவர் பல வருடங்களாக தலைசிறந்த வீரராக இருக்கிறார்" எனக் கூறியிருக்கிறார்.
Also Read | சென்னையில மேட்ச்.. Fans-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்ரோ நிர்வாகம்.. போடு வெடிய..!

மற்ற செய்திகள்
