சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புதிய அவதாரம்.. BCCI பகிர்ந்த சூப்பர் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய டிரெஸ்ஸிங் ரூம் குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | தமிழ்-ல பட்டய கிளப்பும் ரஹானே.. ஹர்பஜனை மிஞ்சிடுவாரு போலயே.. வைரலாகும் வீடியோ..!
கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்
தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
அதற்கு பிறகு இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றபெற்றிருந்தது. இதனால் 2-1 என்ற நிலை ஏற்படவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டி டிரா ஆகவே, 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. இதன் பலனாக உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஒருநாள் தொடர்
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் வைத்து இரண்டாவது போட்டி நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில் கோப்பை யாருக்கு? என தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
வீடியோ
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய டிரெஸ்ஸிங் ரூம் குறித்து இந்திய வீரர்கள் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் புதிய அறைகளை பார்வையிடுகிறார். அப்போது இதுகுறித்து சக வீரர்களிடமும் அவர் பேசுகிறார். அப்போது, சூரிய குமார் யாதவ், ஷார்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் புதிய டிரெஸ்ஸிங் ரூம் பற்றி பேசுகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.
A brand new avatar of Chepauk! 🏟
Take an exclusive tour of the brand new dressing room at the MA Chidambaram Stadium in Chennai with #TeamIndia 👌🏻👌🏻#INDvAUS | @mastercardindia pic.twitter.com/6CvIIrfXJd
— BCCI (@BCCI) March 22, 2023

மற்ற செய்திகள்
