சேப்பாக்கத்தில் VIBE ஆன விராட் கோலி.. ஸ்டெப் எல்லாம் தாறுமாறா இருக்கே.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மைதானத்தில் விராட் கோலி நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | போச்சுடா.. பிரபல இந்திய வீரருக்கு அறுவை சிகிச்சை.. அடுத்த 5 மாதங்கள் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்
தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.
அதற்கு பிறகு இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றபெற்றிருந்தது. இதனால் 2-1 என்ற நிலை ஏற்படவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டி டிரா ஆகவே, 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. இதன் பலனாக உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஒருநாள் தொடர்
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் வைத்து இரண்டாவது போட்டி நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில் கோப்பை யாருக்கு? என தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
கோலி போட்ட ஸ்டெப்
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து ஃபீல்டிங் செய்ய இந்திய அணி வீரர்கள் மைதானத்திற்குள் வந்தனர். துள்ளிக்குதித்து என்ட்ரி கொடுத்த கோலி, மைதானத்தில் நடனமாடியதை கண்டு அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த சூழ்நிலையில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களுக்கு ஏற்றபடி இந்த வீடியோவை எடிட் செய்து சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Virat Kohli being Virat Kohli 😂#INDvsAUS #ViratKohli𓃵pic.twitter.com/ioKIUmZvoF
— Flick of Wrist (@flickk_of_Wrist) March 22, 2023
Also Read | "தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நன்றி".. நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சி பதிவு.. முழு விபரம்..!

மற்ற செய்திகள்
