பாராட்டிய கங்குலி... நன்றி தெரிவித்த அஸ்வின்... ட்வீட்டிய அஸ்வின் மனைவி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 25, 2019 12:05 PM

தமிழக வீரரும், இந்திய அணியின் முன்னணி வீரருமான அஸ்வின் சத்தமில்லாமல் ஒரு சாதனை படைத்துள்ளார்.

sourav ganguly praises ashwin for his achievements

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின், கடந்த 2010 -ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். டெஸ்ட், டி20, ஒருநாள் என 3 வடிவ கிரிக்கெட்டிலும் அசரடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறவில்லை. எனினும் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இந்திய அணியின் வெற்றியில் பங்காற்றி வருகிறார்.

இதற்கிடையில், 2020-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக கிரிக்கெட் துறையில் சாதித்துவரும் வீரர்களின் பட்டியலை, ஐசிசி வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அஸ்வின் நிகழ்த்தியுள்ளார்.  மொத்தம் 564 விக்கெட்டுகள் எடுத்து டாப் 5-ல் முதல் இடத்தில் அஸ்வின் அங்கம் வகிக்கிறார். இவ்வளவு சாதனைகள் செய்து வந்தாலும், அஸ்வினுக்கு உரிய பாராட்டுகளோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்று அவரது ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரங் கங்குலி அஸ்வினுக்கு, தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். அதில், என்ன ஒரு முயற்சி... சில நேரங்களில், இந்த மாதிரி சாதனைகள் கவனிக்கப்படாமல் போகும் என்பதுபோல் ஒரு உணர்வு தோன்றுகிறது... நல்ல உழைப்பு...’ என பதிவிட்டுள்ளார். அதற்கு அஸ்வின் நன்றி தாதா என கூறியுள்ளார். இந்நிலையில், அஸ்வினின் மனைவியும், தனது ட்விட்டர் பக்கத்தில், ஐசிசியின் ட்விட்டரை ட்வீட் செய்துள்ளார்.