மீண்டும் அணிக்கு திரும்பிய... 2 முக்கிய வீரர்கள்... இலங்கை, ஆஸ்தி. தொடருக்கான... இந்திய அணி வீரர்களின் முழு விபரம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 24, 2019 10:53 AM

அடுத்த மாதம் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Bumrah, Dhawan back in t20 and odi, dhoni still gets break

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி வரும் 2020 ஜனவரி மாதம் 5-ம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. இதேபோல், இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி, ஜனவரி 14-ம் தேதி மும்பையில் நடக்கிறது.

இந்த இரு போட்டி தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், முழங்கால் காயம் காரணமாக விலகி இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் மற்றும் முதுகுப்பகுதி காயம் காரணமாக விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர், காயத்திலிருந்து மீண்டதால், இருவரும் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளனர். மேலும், இலங்கை தொடரில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்துள்ளார். இதேபோல், கேரள விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், பல அதிரடி சொந்தக்காரரான தொடக்க ரோகித் சர்மா, ஓய்வு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், இலங்கை தொடரில் மட்டும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முகமது ஷமிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்குப் பின்னர், எந்த போட்டியிலும் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருந்து வரும் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி, ஜனவரி மாதத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்த தொடர்களில் இடம் பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: வாழ்த்துக்கள்! 'கேப்டன்' கூல்... ‘தல’ தோனிக்கு பாராட்டு தெரிவித்த... 'தமிழக' அமைச்சர்!

 

Tags : #BCCI #MSDHONI #SOURAVGANGULY #BUMRAH #DHAWAN #ROHITSHARMA